×

மூதாட்டியிடம் அத்துமீறல் வாலிபர் மீது குண்டாஸ்

ஈரோடு, ஏப். 1: ஈரோட்டில் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைதான வாலிபரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு கஸ்பாபேட்டை நாதகவுண்டம்பாளையம் செக்குமேடு புதுக்காலனியை சேர்ந்த ஜீவானந்தம் (30). இவர், ஈரோட்டை சேர்ந்த 65 வயது மூதாட்டியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் ஜீவானந்தம் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜீவானந்தத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் கந்தசாமி, ஜீவானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தாலுகா போலீசார் ஜீவானந்தத்தை ஈரோடு கிளை சிறையில் இருந்து பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : Erode ,Jeevanandam ,Kasbapet ,Nathakavundampalayam ,Checkumedu ,Pudukkolani ,
× RELATED பண்ணாரி மாரியம்மன் கோயில் வரலாறு