×

ஏரலில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் அன்னை விஜி சரவணன் வழங்கினார்

ஏரல், நவ. 25: ஏரலில் பொதுமக்களுக்கு தவெக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்குவதை சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணன் தொடங்கி வைத்தார். ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குவதை துவக்கி வைத்தார். ஏரல் காய்கனி சந்தை மார்க்கெட், மெயின் பஜார், பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி மணிகண்டன், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அரசமுத்து, ஆழ்வார், ரகீம், மாவட்ட மாணவரணி அருள்ராஜ், சாயர்புரம் நகர துணை செயலாளர் ஜெபஸ்டின், இளைஞரணி கோட்டையா, ஏரல் நகர இணை செயலாளர் காளியப்பன் மற்றும் திருமணி உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Mother Viji Saravanan ,Thaveka ,Airal ,Kapasura ,Gandhi Shilai ,Airal.… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...