×

எளம்பலூர் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை தீபத்திற்கு 2100 மீட்டர் திரி தயாரிப்பு

*டிசம்பர் 3ம் தேதி ஏற்றப்படுகிறது

பெரம்பலூர் : பெரம்பலூரின் திருவண்ணாமலை எனப்படும் எளம்பலூர் பிரம்மரிஷி மலை உச்சியில் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2100 மீட்டர் திரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கார்த்திகை மாதத்தில் நாடெங்கும் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி கோலாகலமாக வீடுகள், கோயில்கள், நிறுவனங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதில், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலக அளவில் புகழ்பெற்றதாகும்.

அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தின் திருவண்ணா ‘மலை’ எனப்படும், எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்திலுள்ள மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப் படுவதுபோல், பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, 43-வது ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி மாலை 6-மணியளவில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. விழாவையொட்டி, நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில், தீபத் திருவிழாவில் 5 அடி உயர செப்புக் கொப்பரையில்ஏற்றப்படவுள்ள 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணிகள் தொடங்கின. இதில், மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகிகள் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னின்று பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி கூறுகையில், மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு தீபத்திருவிழா 3ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, 2100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பசு நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என 1008 லிட்டர் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்காக நெய், நல்லெண்ணை வழங்குவோர் வழங்கலாம்.

வரும், 3ஆம் தேதி காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வபூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 10.15 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகாதீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊர்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டுவரப்படுகிறது.

மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீப விழாவில் சாதுக்களுக்கு வேஷ்டி, காசு தானமும், பொது மக்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட உள்ளது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை மெய்யன்பர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Karthigai Deepam ,Brahmarishi Hill ,Elambalur ,Perambalur ,Karthigai Deepam festival ,Thiruvannamalai, Perambalur ,Karthigai… ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்