- காப்ஸி தொடர்பான 20 வது தேசிய மாநாடு
- ஈயத்
- சென்னை
- அமைச்சர்
- வி.கணேசன்
- தொழில் நலன்புரி
- C.C.
- CAPSI இன் 20 வது தேசிய மாநாடு
- ஐஐடி மேட்ராஸ் அரினா
- வி. கணேசன்
- தனியார் பாதுகாப்பு தொழிலின் மத்திய சங்கம்
- கேப்ஸி
- 20 வது தேசிய மாநாடு
- சென்னை ஐஐடி மத்ராஸ் ரிசர்ச்ச் பார்க்
சென்னை: ஐஐடி மெட்ராஸ் அரங்கில் கேப்ஸி-யின் 20வது தேசிய மாநாட்டை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கிவைத்தார். சென்னை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா அரங்கில் சென்ட்ரல் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் செக்யூரிட்டி இன்டஸ்ட்ரி (கேப்ஸி) தனது 20வது தேசிய மாநாட்டை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.
அதேபோல், இம்மாநாட்டில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த பாதுகாப்பு பணியாளர்களுக்கு ‘கோல்டன் கார்ட்’ விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேப்ஸியின் தேசிய தலைவர் குன்வர் விக்ரம் சிங், தமிழ்நாடு பிரிவு தலைவர் நெவில் ரயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
