×

நிதிஷ்குமாருக்கு முதல் தலைவலி பீகார் சபாநாயகர் பதவி யாருக்கு?

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் வியாழன்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. கயா டவுன் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 9வது முறையான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ பிரேம் குமார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பதால் சபாநாயகர் பதவிக்கு முன்னிலையில் இருப்பதாக கருதப்படுகின்றது. ஐக்கிய ஜனதா தளத்தில் ஜாஜா எம்எல்ஏ தாமோதர் ராவத்தின் பெயரும் சபாநாயகர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Nitish Kumar ,Speaker ,Bihar ,Patna ,Janata Dal United ,Chief Minister ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...