×

மக்கள் கிராம சபை கூட்டங்கள்

இளம்பிள்ளை, ஜன.7: சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மகுடஞ்சாவடி ஒன்றியம் கனககிரி ஊராட்சி காக்காபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்து பேசினார். ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மல்லிகா கந்தசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். கெங்கவல்லி: பச்சமலை ஊராட்சி வேப்படி பாலக்காடு மலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் அகிலன் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தலைவாசல் அருகே வரகூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் மணி(எ) பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி கலந்து கொண்டனர். வாழப்பாடி: வாழப்பாடி பேரூர் திமுக சார்பில் 13வது வார்டு மாரியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலாளர் செல்வம் தலைமை வகித்து பேசினார். ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, கிழக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் தனசேகரன், குமார், கல்பனா, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாழப்பாடி அருகே சென்ராயன் பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் சிங்காரவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பங்கேற்று, பொதுமக்களிடையே கோரிக்கையை கேட்டறிந்தனர். இதேபோல், பேளூரில் நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி மனோகரன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அயோத்தியாபட்டணம்: அயோத்தியாபட்டணம் அருகே பள்ளிப்பட்டியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு  துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். கூடடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்து, ஒன்றிய பொருளாளர் வெங்கட் ராசு, ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதி ஜெயக்குமார், ப்ரீத்தி மோகன்,  ஊராட்சி மன்ற தலைவர் கலாப்ரியா பழனிசாமி, செல்வி சேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தி, கிளை செயலாளர்கள் கண்ணன், வெங்கடேசன், விஜயகுமார், அருள், முருகன், பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டுனர். 

Tags : Village Council Meetings ,
× RELATED கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...