×

ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தார் கைது: மயங்கியதால் அட்மிட்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இறந்தார். இந்நிலையில் தமிழக அரசால் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் ஈமச்சடங்கு உதவித்தொகை பெற பெருமாள் மகன் சேகர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை அணுகி மனு கொடுத்தார்.

இதற்காக வள்ளியம்மாள், நேற்று சேகரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது வள்ளியம்மாள் திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Jolarpettai ,Perumal ,Malar ,Natrampalli ,Tirupattur district ,Shekhar Natrampalli ,Tamil Nadu government ,
× RELATED தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி...