×

பைக் மீது லாரி மோதி விஏஓ, மகள் பலி

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). தாண்டவ சமுத்திரகுப்பம் கிராமத்தில் விஏஓவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை புதுச்சேரி, தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும் மகள் சூர்யபிரியாவை(17) பைக்கில் அழைத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார். கஞ்சனூர் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர் திசையில் முண்டியம்பாக்கத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

Tags : VAO ,Vikravandi ,Venkatesan ,Thuthippattu village ,Senchi taluk, Villupuram district ,Thandava Samuthirakuppam village ,Suryapriya ,Puducherry ,Villupuram… ,
× RELATED விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!