×

நத்தம் அருகே புகையிலை விற்ற கடைக்கு சீல்

நத்தம், நவ. 13: நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சாபர் சாதிக் வத்திபட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் உள்ள பொன்னையா என்பவரது டீக்கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் கடையில் இருந்த 600 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபாரதம் விதித்தார். மேலும் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

 

Tags : Natham ,Dindigul ,District ,Food Safety Designated Officer ,Kalaivani ,Regional ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...