×

திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழை குறித்து புகார் தரலாம்

திருத்துறைப்பூண்டி, நவ. 13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வபோது மழை பெய்து வருகிறது. நகராட்சி 24 வார்டுகளில் பொது சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் வார்டு மக்கள் புகார் அளிக்கலாம்.

அதற்க்காக வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறையில் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்த புகார்களை அலைபேசி 8870483433 மற்றும் 04369222551 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் வாட்ஸ் அப் மூலமும் புகைப்படங்களை அனுப்பலாம் என்று திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் மற்றும் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி ஆகியோர் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அலுவலகம் முன்பு அறிவிப்பு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Thiruthuraipoondi ,Thiruthuraipoondi Municipality ,Thiruvarur district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...