- மன்னார்குடி சார்பு நீதிமன்றம்
- மன்னார்குடி
- வட்ட சட்ட சேவைகள் குழு
- தஞ்சாவூர் தனியார் கண் மருத்துவமனை
- மன்னார்குடி சார்பு நீதிமன்றம்...
மன்னார்குடி, நவ. 13: மன்னார்குடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது. வட்ட சட்ட பணிகள் குழு, தஞ்சை தனியார் கண் மருத்துவமனை இணைந்து மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக வட்ட சட்ட பணிகள் குழு தலைவர், சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன், இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கிவைத்தார். முகாமில், மருத்துவர்கள் இந்துமதி, சிவகணேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களின் கண்களை பரிசோதனை செய்து உரிய ஆலோசனை வழங்கினர்.
இம்முகாமில், சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் அன்புச்சோழன், திருவாரூர் மாவட்ட மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் கலைவாணன், மன்னார்குடி வழக்கறிஞர் சங்கத்தலைவர் இளஞ்சேரன், செயலர் ராதா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் தமிழரசன், உதயகுமார், இலக்கியதாசன், பழனிச்சாமி உள்பட ஏராளமான வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்கள் பயன் பெற்றனர்.
