×

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

அரியலூர், நவ. 13: அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகின்றது.

அதன்படி, நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் மனுதாரர்களின் தங்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களை விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இந்த முகாமில் 41 பேர் மனு கொடுத்தனர்.

 

Tags : Civilian Special Detention Camp ,Ariyalur SP Office ,Ariyalur ,Ariyalur SP ,Ariyalur District Police Office ,District Police Office ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...