×

பொங்கல் ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் ரயில் முன்பதிவை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி ஜனவரி 9 முதல் 18ம் தேதிவரை நடைபெறும் பொங்கல்கால பயணங்களுக்கான முன்பதிவு இன்று முதல் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும்.

பொங்கல் வாரத்தில் ரயில் பயணிகளின் பெரும் நெரிசல் எதிர்பார்க்கப்படுவதால் டிக்கெட்டுகள் விரைவாக நிறைவடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே பயணிகள் தங்களது பயணத்தேதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு IRCTC இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு மையங்கள் வழியாக டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Pongal ,Chennai ,Pongal festival ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...