×

வார இறுதி நாளில் தங்கம் விலை பவுன் ரூ.99,200க்கு விற்பனை: வெள்ளி விலையும் எகிறியது

சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,200க்கு விற்பனையானது. தங்கம் விலை ஆண்டு இறுதியான இம்மாதத்தில் தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக தங்கம் விலை கடந்த 15ம் தேதி பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120 என்ற இமாலய உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வந்தது. இந்த நிலையில் வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.99,200க்கு விற்பனையானது. அதே போல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.226க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Tags : Chennai ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...