- எஸ்ஐ
- கடலூர்
- ராஜேந்திரன்
- அவினங்குடி காவல் நிலையம்
- கடலூர் மாவட்டம்
- இமாம் ஹுசைன்
- அவினங்குடி
- அன்னவெளி
- கடலூர்-விருத்தாசலம் சாலை
கடலூர்,: கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்(49). இவரும் போலீஸ்காரர் இமாம் உசேனும் (33) நேற்று ஒரு காரில் கடலூர் சென்றுவிட்டு மாலையில் ஆவினங்குடி திரும்பி கொண்டிருந்தனர்.
கடலூர்- விருத்தாசலம் சாலையில் அன்னவெளி என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் டூவீலருடன் நின்றிருந்த 4 பேர் மீது கார் மோதியது. இதில் கட்டிட தொழிலாளர்கள் ஜெயராஜ்(45), வடிவேல்(45) ஆகியோர் பலியாகினர். பாஸ்கர்(47), மோகன்(60) படுகாயம் அடைந்தனர்.
