×

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காபூல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.59 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் குல்ம் நகரத்தில் இருந்து மேற்கு -தென்மேற்கே 22கி.மீ. தொலைவில் 28கி.மீ. ஆழத்தில் உருவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பால்க் ம்றறும் சமங்கன் மற்றும் பாக்லான் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சுகாதார துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான் கூறுகையில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 320 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.

Tags : Afghanistan ,Kabul ,northern Afghanistan ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு