×

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை கோரிய மனு : நேபாளத்தில் எழுந்த எதிர்ப்பை சுட்டிக் காட்டி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!!

டெல்லி : சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 14-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை
பயன்படுத்த முழு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் சட்டம் இயற்றியதுபோல நம் நாட்டிலும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்ட நிலையில், நேபாளில் இதை செய்ய முயற்சித்தபோது என்ன நடந்தது பார்த்தீர்கள்தானே எனக் கூறி விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Tags : Supreme Court ,Nepal ,Delhi ,Australia, China ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...