×

ஐகோர்ட் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை: மதுரை ஐகோர்ட் கிளையின் அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை 11 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தகவல் வந்திருந்தது. இது குறித்து ஐகோர்ட் கிளை போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் சிஐஎஸ்எப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் குடியிருப்பு, நீதிமன்ற வளாகம் முழுவதும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடந்தது. சுமார் ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. கடந்த செப்.26ம் தேதி ஐகோர்ட் கிளை பதிவாளர் மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : High Court ,Madurai ,Madurai High Court ,CISF ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...