×

ஆந்திர இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை டிஸ்மிஸான 2 போலீசார் மீது குண்டாஸ்: திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரவு ரோந்து பணியின்போது, ஆந்திர மாநில இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதால் கைதான 2 போலீசார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர் (32), சுரேஷ்ராஜ்(30) இருவரும் கடந்த மாதம் திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வாழை ஏற்றி வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி பைபாஸ் சாலை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, வேனில் சித்தியுடன் வந்த 20 வயது இளம்பெண்ணை மிரட்டிய 2 போலீசாரும், ஏந்தல் கிராமத்தில் உள்ள மயானம் அருகே முட்புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்நிலையில், எஸ்பி சுதாகர் பரிந்துரையின்பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Andhra Pradesh ,Tiruvannamalai Collector ,Tiruvannamalai ,Sundar ,Sureshraj ,East ,Police Station ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...