×

ஜம்மு சர்வதேச எல்லையில் டிரோன் மூலம் ஹெராயின் போதை பொருள் கடத்த முயன்ற பாக்.கின் சதி முறியடிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஆர்.எஸ்.புரா செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் டிரோன் வானில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பிஎஸ்எப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பைகளில் வைத்து வீசப்பட்டிருந்த ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உளவு துறையின் மூலம் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, இந்தியாவுக்குள் போதை பொருளை கடத்த முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.டிரோன் மூலம் பைகளில் அடைத்து வீசப்பட்ட ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கிலோ எடை கொண்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Jammu ,RS Pura ,Union Territory of Jammu and Kashmir ,BSF ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...