×

பீகார் சட்டபேரவை தேர்தல் ராகுல் காந்தி நாளை பிரசாரம் தொடங்குகிறார்

பாட்னா: பீகார் பேரவை தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தேஜ கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி கடந்த 25ம் தேதி சமஸ்திபூரில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில்,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை முசாபர்பூர், தர்பங்கா மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். முசாபர்பூர் மாவட்டம்,சக்ரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த தொகுதியில் உமேஷ் ராம் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு தேர்தலில் உமேஷ்ராம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜேடியு கட்சியை சேர்ந்த அசோக் சவுத்ரியிடம் தோல்வியடைந்தார். இந்த பிரசாரத்தில் ஆர்ஜேடி தலைவரும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதை தொடர்ந்து தர்பங்கா மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்வார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Tags : Bihar Assembly Election ,Rahul Gandhi ,Patna ,Bihar Assembly ,Modi ,Samastipur ,Tejashwi Yadav ,Lok Sabha ,Muzaffarpur ,Darbhanga ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...