×

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டி: தமாகா பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். முன்னதாக, அரங்கத்திற்கு முன்பு கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. காஞ்சி மாவட்ட தலைவர் வேணு வரவேற்றார். கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் தமாகா மரியாதைக்குரிய கட்சியாக மக்கள் முன் நிற்கிறது. காமராஜர் காலத்திலேயே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்கவர்கள் இந்த இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: வரும் சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் பாஜ தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் தேசிய கூட்டணி வெற்றி பெற வைக்க தமாகா பொதுக்குழு அறைகூவல் விடுக்கிறது. இந்த தேர்தலில் தமாகா தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் கட்சி தலைவருக்கு வழங்குவது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மூத்த நிர்வாகிகள் ஈ.எஸ்.எஸ்.ராமன், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், என்.எஸ்.வி.சித்தன், உடையப்பன், ராம்பிரபு, ரங்கராஜன், மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஜவஹர் பாபு, ராஜம் எம்பி நாதன், சைதை மனோகரன், சைதை நாகராஜ், கே.ஆர்.டி. ரமேஷ், திருவேங்கடம், பாலசந்தானம் எல்.கே.வெங்கட், கோவை வாசன், ஆர்.எஸ்.முத்து மாவட்ட தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண் குமார், தி.நகர் கோதண்டன், கே.பி.லூயிஸ், தென்காசி மாவட்ட தலைவர் என்.டி.எஸ். சார்லஸ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,TMC general ,Chennai ,Tamil Maanaya Congress Party ,Pallavaram Radial Road ,G.K. Vasan ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...