×

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல்; 4 பேர் பலி

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதி திமாபூர் செல்லும் இண்டிகோ விமானம், ஓடுபாதைக்கு வாகனம் மூலம் இழுத்து வரப்பட்ட சமயத்தில், விமானத்தில் இருந்த ஒரு பயணியின் பவர் பேங்க் தீப்பிடித்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டாலும் சக பயணிகள் பதற்றமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) விசாரணை மேற்கொள்ளும்’’ என்றார். மின்னணு பொருட்கள் குறிப்பாக லித்தியம் பேட்டரிகள் கொண்டவற்றை விமானத்தில் கொண்டு செல்வதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல்; 4 பேர் பலி: உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். இதேபோல், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், கடை உள்ளிட்டவை மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்களில் 2 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.

Tags : Russia ,Ukraine ,Kiev ,New Delhi ,Dimapur ,Delhi airport ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...