×

ரூ.855 கோடி ஆரம்ப முதலீட்டில் பேஸ்புக்- ரிலையன்ஸ் இணைந்து தொடங்கும் புதிய ஏஐ நிறுவனம்

புதுடெல்லி: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் ஏஐ நிறுவன முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்று ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏஐ வென்ட்சர் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ளது. இது தொடர்பாக நிறுவனம் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது,‘‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் 2025 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியன்று ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் நிறுவனத்தை ஏஐ வென்சருடன் இணைத்தது. ரிலையன்ஸ் இன்டலிஜென்சுக்கு சொந்தமான துணை நிறுவனமான ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் நிறுவனமானது, மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேஸ்புக் ஓவர்சீஸ்.இன்க் உடனான திருத்தப்பட்ட மற்றும் மீண்டும் அறிவிக்கப்பட்ட கூட்டு முயற்சி நிறுவனமாக மாறும். ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் நிறுவன் ஏஐ சேவைகளை உருவாக்கி சந்தைப்படுத்தி விநியோகிக்கும்.

கூட்டு ஒப்பந்தத்தின்படி, ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் 70 சதவீத பங்குகளையும் பேஸ்புக் 30 சதவீத பங்குகளையும் ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட்டில் வைத்திருக்கும். ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் பேஸ்புக் இணைந்து ரூ.855கோடியை ஆரம்ப முதலீடாக செய்துள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Facebook-Reliance ,New Delhi ,Facebook ,Mukesh Ambani ,Reliance Industries ,Reliance Industries' ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...