×

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை செஷல்ஸ் பயணம

புதுடெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக நாளை செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார். இந்திய பெருங்கடல் தீவு நாடான செஷெல்ஸ் நாட்டில் அதிபருக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிபராக இருந்த வேவல் ராம் கலவன் தோல்வியடைந்தார். அதிபராக வெற்றி பெற்ற பேட்ரிக் ஹெர்மினியின் பதவி ஏற்பு விழா விக்டோரியா நகரில் நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக செஷல்ஸ்க்கு செல்கிறார்.

ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: செஷல்ஸ் நாட்டின் அழைப்பின் பேரில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் செல்கிறார். இந்த பயணத்தின் போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் வாழ்த்துக்களை ஹெர்மினிக்கு தெரிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Tags : Vice President ,C.P. Radhakrishnan ,Seychelles ,New Delhi ,presidential ,Indian Ocean island ,Opposition Leader ,Patrick Hermini ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...