புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக மனிஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்த கிருஷ்ணா அல்லவாரு, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் கட்சி விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருக்கிறார்.
