×

கர்நாடகாவில் வாக்கு திருட்டு புகார் ஒரு வாக்கு நீக்கத்திற்கு ரூ.80 வசூலித்த 6 பேர்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

பெங்களூரு: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அப்போது கர்நாடகா மாநிலம் ஆலந்த் தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு தொடர்பாக அவர் விளக்கமாக எடுத்து கூறினார்.  இதையடுத்து கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஆலந்த் தொகுதி வாக்கு திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போது ஆலந்த் தொகுதியில் வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு நீக்கத்திற்கும் ரூ.80 வசூலித்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 6 பேரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகிறார்கள். ஆலந்த் தொகுதியில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அடங்கிய 6,994 வாக்குகளை நீக்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த புகார் அடிப்படையில் இந்த நீக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது சிக்கியுள்ள 6 பேர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஜனநாயகத்தின் மீதான பாஜவின் நேரடி தாக்குதல்
காங்கிரஸ் கட்சி கூறுகையில்,’வாக்கு திருட்டு என்பது ஜனநாயகம் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல். மக்கள் பாஜவின் நோக்கங்களைப் புரிந்துகொண்டதால், அதற்கு கடுமையான பாடம் கற்பிப்பார்கள். ஆலந்த் தொகுதியில் 6018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க போலி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக மொத்தம் ரூ.4.8 லட்சம் செலுத்தப்பட்டது கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்காளர் நீக்கத்திற்கான இந்த போலி விண்ணப்பங்கள் கலபுரகியில் உள்ள ஒரு தரவு இயக்க மையத்திலிருந்து அனுப்பப்பட்டன’ என்று குற்றம் சாட்டியது.

Tags : Karnataka ,Special Investigation ,Bengaluru ,Lok Sabha ,Rahul Gandhi ,Aland ,Congress government ,Karnataka… ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...