×

வீட்டின் அருகே விளையாடியபோது மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை பலி: மாங்காட்டில் சோகம்

சென்னை: சென்னை அடுத்த மாங்காடு, ஜனனி நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கு, திருமணமாகி கணவர் மற்றும் இரண்டரை வயதில் பிரினிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை தாயும், மகளும் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தாய் பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது, அருகில் படுத்திருந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் குழந்தை மூழ்கி கிடப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று சேர்த்தனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mankadu ,Chennai ,Priyadarshini ,Janani Nagar, Mankadu ,Prinika ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...