×

போலீசாருடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்ற நடிகை அம்பிகா விருப்பம்

சென்னை: வடகிழக்கு பருவமழை சென்னை, வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்களுக்கு என தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் வெள்ளம் பாதித்த பகுதிகளின் நிலை குறித்தும், மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்து போக்குவரத்து இணை கமிஷனர் விஜயகுமார் அறிவித்து, அதற்கான வலைத்தள லிங்க் ஒன்றையும் இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் பிரபல நடிகை அம்பிகா வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். முகக்கவசம் அணிந்து வந்த அவர், போக்குவரத்து இணை கமிஷனர் விஜயகுமாரை நேரில் சந்தித்து, போலீசாருடன் இணைந்து பணியாற்றும் வகையில், தன்னார்வலர்கள் குழுவில் தான் இணைய உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னார்வலர்கள் குழுவில் தன்னால் இணைய முடியவில்லை என்று இணை கமிஷனரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது, தன்னார்வலர்கள் குழுவில் இணைப்பது குறித்து ஆய்வு செய்த போது, வாட்ஸ் அப் குழுவில் 1000 பேருக்கு மேல் இணைந்துள்ளதால், நடிகை அம்பிகாவால் தனது செல்போன் எண்ணை தன்னார்வலர்கள் குழுவில் இணையமுடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் தன்னார்வலர்கள் குழுவில் நடிகை அம்பிகாவை இணைப்பதாக போலீசார் உறுதி அளித்து, அவரது செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டனர். அதைதொடர்ந்து நடிகை அம்பிகா சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ambika ,Chennai ,WhatsApp ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...