×

தமிழ்நாட்டை போல உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை பரிந்துரைக்கவேண்டும்: திமுக எம்பி கிரிராஜன் வலியுறுத்தல்

 

சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்பி இரா.கிரிராஜன், மாற்றுத் திறனாளிகளுக்கான சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சட்ட கட்ட மைப்புகளாக ”மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு, முழு பங்கேற்பு சட்டம், 1995” மற்றும் ”மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம், 2016” ஆகியவை அவர் களுக்கான உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன என தெரிவித்ததுடன், இவற்றின் மூலம் உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார சேவைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கி இருப்பினும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருக்கும்போது மட்டுமே இவை சாத்திய மாகும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுத் திறனாளிகளை பரிந்துரைப்பதில் தமிழ்நாடு அரசு குறிப் பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு இதுவரை 3,631 மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், 28 கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் முடிந்த பிறகு, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கூடுத லாக 12,000 மாற்றுத் திறனாளிகளை பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழ்நாட்டின் நிலவரத்தை குறிப்பிட்டு பேசினார். சமூக நீதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவத்திற்கான உறுதிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் முன்னெடுப்பாகும்.

பஞ்சாயத்து உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை பரிந்துரைப்பதை எளிதாக்கும் வகையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (மாற்றுத் திறனாளிகளை உறுப்பினராக நியமனம் செய்தல்) விதிகளை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ளதாகவும் ஆவணப்படுத்தி திமுக எம்.பி. கிரிராஜன் பேசினார். இவர்கள் தங்கள் பணிக்காக அரசு நிர்ணயித்த கௌரவ ஊதியம் மற்றும் படித்தொகை ஆகியவற்றை பெற உரிமை உண்டு. தமிழ்நாடு அரசு பின்பற்றும் இந்த நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்றப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Dimuka ,Krirajan ,Chennai ,Ira. Krirajan ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...