×

வங்கக் கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்

டெல்லி: வங்கக் கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதை அடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.

Tags : Bank Sea ,Indian Meteorological Center ,Delhi ,Indian Meteorological Centre ,Southeast Bank Sea ,South Andaman Sea ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...