புதுடெல்லி: டெல்லி தாஜ் ஓட்டலில் ஷ்ரத்தா சர்மா என்ற பெண் சாப்பிட சென்றார். அப்போது கால் மேல் குறுக்காக கால் போட்டு அமர்ந்து இருந்தார். ஓட்டல் மேலாளர் அவரை அணுகி, மற்ற விருந்தினர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதால் அப்படி உட்கார வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
இதை ஷ்ரத்தா சர்மா இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறும்போது,’ சொந்தமாக பணம் சம்பாதித்து, தாஜ் ஓட்டலுக்கு செல்லும் ஒரு சாதாரண மனிதர், இந்த நாட்டில் இன்னும் அவமானத்தை எதிர்கொள்கிறார். என் தவறு என்ன? நான் வழக்கமான பத்மாசன பாணியில் அமரக்கூடாதா என்ன? ’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் அதில் பலர் பதிவிட்டுள்ளனர்.
