×

திருவனந்தபுரத்தில் ஐடி பெண் ஊழியரை பலாத்காரம் செய்த தமிழக லாரி உரிமையாளரை மடக்கி பிடித்த கேரள போலீசார்: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியரான ஒரு இளம்பெண் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 18ம் தேதி அதிகாலை கதவை உடைத்து விடுதி அறைக்குள் புகுந்த ஒரு மர்ம நபர் அந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினார். போலீஸ் விசாரணையில் அந்த நபர் மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் என்பது கண்டறியபட்டது.

மதுரைக்கு வந்த தனிப்படை போலீசார் சைபர் செல் போலீசின் உதவியுடன் பெஞ்சமினின் செல்போன் டவரை வைத்து நடத்திய பரிசோதனையில் அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தன் படை போலீசார் அங்கு விரைந்தனர். போலீசை பார்த்ததும் அந்த நபர் ஓட்டம் பிடித்தார். அவரை ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தான் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பெஞ்சமின் (36) என்றும், டிரைவரும் உரிமையாளரும் ஒரே நபர் தான் என்றும் தெரியவந்தது.

சரக்கை ஏற்றி செல்லும் இடங்களில் எல்லாம் பெஞ்சமின் தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளார். சாலை ஓரங்களில் படுத்து தூங்கும் இளம்பெண்களை பலாத்காரம் செய்வது, ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடுவது உள்பட கிரிமினல் குற்றங்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். மதுரையில் இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது.

Tags : Kerala ,Tamil Nadu ,Thiruvananthapuram ,Thiruvananthapuram Techno Park ,
× RELATED பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்