சென்னை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகளை தயாராக வைத்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரம் ஜிப்சி காலனி நரிக்குறவர் குடியிருப்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உணவு வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மழைக்காலத்திற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடிக்கான மருந்து, நாய்க்கடிக்கான மருந்தும் இருப்பு உள்ளது’’ என்றார்.
