×

போலி ஆவணங்களின் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டவர் கைது

 

சென்னை: போலி ஆவணங்களின் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி, அபுதாபி செல்லும் விமான பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த உத்தம் உராவ், என்பவரின் ஆவணங்களை பரிசோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த இந்திய பாஸ்போர்ட் போலியானது என்பதும், இவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், தெரியவந்ததின்பேரில், மேற்படி நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, நேற்று (21.10.2025) சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் உத்தம் உராவ் என்பவரை ஒப்படைத்து, புகார் கொடுத்ததின்பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையாளர் அருண், உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் A. ராதிகா. அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சீட்டு மோசடி, கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில், போலி கடவுச்சீட்டு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த உத்தம்குமார், வ/25, என்பதும், இவர் 2015ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மேற்கு வங்களாத்தில் வசித்துக் கொண்டு, உத்தம் உராவ் என்ற பெயரில் ஆதார் கார்டு, வாக்களார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து அதன்பேரில், போலியான பெயரில் இந்திய கடவுச்சீட்டு பெற்று, அபுதாபி செல்ல முயன்றது தெரியவந்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் எதிரி உத்தம்குமார், வ/25, ஐயாஜ், ஜிர்குபுரா, பனஹார், கட்டாகிரி, ராஜ்சாஹி, பங்களாதேஷ் என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து போலியானகடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான்அட்டை, பங்களாதேஷ் அடையாள அட்டை மற்றும் 1 கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி உத்தம்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Chennai ,Central Crime Police ,Chennai International Airport ,Abu Dhabi ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...