×

ஏமன் வளைகுடாவில் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஏமன் அருகே ஏடன் வளைகுடாவில் கப்பல் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதால் தீப்பிடித்து எரிந்தது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே, ஓமனின் சோஹாரில் இருந்து திஜிபவுதி நோக்கி சென்ற டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக கப்பல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கப்பலை கைவிடுவதற்கு அதன் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். எனினும் மீட்பு பணிகளுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றது.

Tags : Gulf of Yemen ,Dubai ,Gulf of Aden ,Yemen ,Red Sea ,Ambre ,Sohar, Oman ,Djibouti… ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...