- திமுக
- எடப்பாடி
- அஇஅதிமுக
- அமைச்சர்
- சிவசங்கர்
- சென்னை
- போக்குவரத்து அமைச்சர்
- எஸ்.எஸ்.சிவசங்கர்
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக குறித்து ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு உருட்டுக்கடை அல்வா என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார். அவர்தான் இன்று திருட்டுக்கடை பழனிசாமியாக இருக்கிறார்.
அதிமுகவை ஒரு திருட்டுக்கடை போல எல்லோரிடமும் கைப்பற்றி இருக்கின்றவர் – திமுகவை பார்த்து உருட்டுக்கடை என்று சொல்வது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு அதிமுக என்ற திருட்டு கடையை திருட்டுத்தனமாக கைப்பற்றி கையில் வைத்துக் கொண்டு திமுகவை எள்ளி நகையாடுகிற இந்த பணியை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் இந்த வேலையில் இறங்க கூடாது.
