×

கூட்டுறவு தயாரிப்புகளான கேழ்வரகு, கோதுமை மாவு ‘பிளிங்கிட்’ விரைவு வணிக தளத்தில் கிடைக்கும்: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை: கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புக்கு ஏற்றவாறு முதற்கட்டமாக காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி பாசுமதி அரிசி (1 கிலோ), காஞ்சி கேழ்வரகு மாவு (500 கிராம்), காஞ்சி நாட்டுச் சர்க்கரை (500 கிராம்), காஞ்சி கோதுமை மாவு (500 கிராம்), கம்பு மாவு (500 கிராம்) மற்றும் கடலை மாவு (250 கிராம்) ஆகியவை விரைவு வணிக தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முதற்கட்டமாக காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி கேழ்வரகு மாவு மற்றும் காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றின் விற்பனையை பிளிங்கிட்விரைவு வணிக தளத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

இந்த சேவையை பெற பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் பிளிங்கிட்(Blinkit) என்ற விரைவு வணிக மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, search-ல் கூட்டுறவு பொருட்களை உள்ளீடு செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.  உதாரணமாக “Kanche Ragi flour” என உள்ளீடு செய்து காஞ்சி கேழ்வரகு மாவினை ஆர்டர் செய்து கொள்ளலாம்.  சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மேற்காண்ட கூட்டுறவுத் தயாரிப்புகளை குறைந்த விலையில், தரமானதாக பிலிங்கிட் விரைவு வணிக தளத்தில் தங்கள் இல்லங்களுக்கே ஆர்டர் செய்து, வாங்கி பயனடையலாம்.

Tags : Blingit ,Minister ,Periyakaruppan ,Chennai ,Kanchipuram Consumer Cooperative Wholesale Warehouse ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்