×

தவெக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அப்போது காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கவுதம் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாகவும், ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறி, அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில், கடந்த 9ம் தேதி தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி நேற்று விசாரித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு வாரத்திற்கு தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags : Thaweka ,Madurai ,Vijay Prasad ,Karur ,Gautham ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்