×

கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் குழந்தையை கடத்திய ரவுடி

பெரம்பூர், அக்.18: வியாசர்பாடி ரேணுகாம்பாள் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (52). இவரது மகள் மகேஸ்வரி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்த ரவுடி சரத் (23) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், சரத்தையும் பிரிந்து தனது தாயுடன் மகேஸ்வரி வசித்து வருகிறார். இதனால், ஆத்திரமடைந்த சரத், நேற்று மகேஸ்வரியின் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார், மஞ்சம்பாக்கத்தில் சரத்தின் நண்பர் வீட்டில் இருந்து சிறுவனை மீட்டனர். தப்பிய சரத்தை தேடி வருகின்றனர்.

Tags : Rawudi ,PERAMPUR ,LAKSHMI ,VIASARPADI ,RENUKAMBAL TEMPLE STREET ,Maheshwari ,Rawudi Sarath ,Vyasarbadi Sanjay ,
× RELATED நந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில்...