×

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக முன்னாள் அர்ச்சகர் கைது!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் விசாரணைக்கு பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அவரை கைது செய்தது. சபரிமலை கோயில் துவார பாலகர் சிலை கவசம் செய்ய வழங்கப்பட்ட தங்கம் திருட்டு என்று புகார் எழுந்தது. புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Sabarimalai ,Ayyappan Temple ,Thiruvananthapuram ,Unnikrishnan Bodhi ,Sabarimalai Ayyappan Temple ,Special Investigation Team ,Unnikrishnan ,Sabarimalai Temple ,Tuwara Balagar ,
× RELATED வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில்...