×

திருப்பதியில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருப்பதி : திருப்பதி மாவட்டம், பாகாலா ரயில் நிலையம் அருகே 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார்உடனடியாக அங்கு சென்று சிறுவர்களை பாதுகாப்பாக மீண்டு தங்குமிடம் அளித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்த மோகன் ராஜூ மகன் குமார் வருண்(12), சுரேந்திரா மகன் தருண்(11) என்பது தெரியவந்தது.

இருவரும் கடந்த 11ம் தேதி அன்று காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து சின்னகோத்தப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரு பெற்றோர்களையும் பாகாலா காவல் நிலையம் வரவழைத்து சிறுவர்களை பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தைகள் வெளியே சென்ற பின், அவர்கள் இருக்கும் இடத்தை அவ்வபோது பெற்றோர்கள்அறிய வேண்டும். குழந்தைகளிடம் நட்பான முறையில் பேச வேண்டும், அவர்களின் உணர்வுகள் அறியப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் தங்களுக்குத் தெரியாதவர்களுடன் செல்லக்கூடாது என்று சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளைக் கவனிக்கும் குடிமக்கள் உடனடியாக 112 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Tags : Tirupati ,Railway Police ,Bagala railway station ,Tirupati district ,Sathya… ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்