×

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான விடைத்தாள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 7.9.25 முற்பகல், 11.9.25 முதல் 18.9.25 வரை மற்றும் 22.9.25 முதல் 27.9.25 வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான(பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) விடைத்தாள்கள்(கணினி வழித்தேர்வு) தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 11ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,A. Shanmuga Sundaram ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு