×

தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை ராணுவத்தினர் கண்டறிந்தனர். இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது, எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கவே, பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tags : Srinagar ,Army ,Machil ,Kupwara district ,north Kashmir ,Indian Army ,Jammu and Kashmir Police ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...