புதுடெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது மாநிலத்தின் நிதி நிலைமை உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கமளித்ததாக தெரிகின்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன்,‘‘மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கமளித்து உதவி கோரியிருக்கிறேன்” என்றார். முன்னதாக முதல்வர் பினராயி ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்தார்.
