×

மத்தியப் பிரதேசத்தில் 10ம் வகுப்பு தகுதி கொண்ட காவலர் தேர்வுக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர்கள் விண்ணப்பம்!

போபால் : மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலர்(கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, மபி மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த காவலர் பணிக்கானக் குறைந்தபட்ச தகுதி உயர்நிலைப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும், ஆனால் விண்ணப்பதாரர்களில் 52,000 முதுகலை பட்டதாரிகள், 33,000 பட்டதாரிகள், 12,000 பொறியாளர்கள் மற்றும் சுமார் 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இப்பணிக்கானத் எழுத்துத் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை, மாலை என இரண்டு வேளைகளாக நடைபெறுகிறது. இப்பணிக்கு முனைவர் உள்ளிட்ட பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பது மத்தியப் பிரதேசத்தில் வேகமாக அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் அரசுப் பணிகளுக்கு உருவாகி விட்ட கடுமையான போட்டியை காட்டுகிறது. மேலும் இம்மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

Tags : Guard ,Madhya Pradesh ,Bhopal ,Madhya ,Pradesh Police ,Mabi ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...