×

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ஷூ வீச முயற்சி!

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ஷூ வீச முயற்சித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் கஜூராகோ கோயிலில் தலை இல்லாத சிலையை மாற்றக் கோரிய வழக்கு கவாய் முன்பு விசாரணைக்கு வந்தது. சிலை மாற்றியமைப்பதற்கு கடவுளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என தலைமை நீதிபதி கவாய் கூறியிருந்தார். தலைமை நீதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷூ வீச முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சனாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது’ என ராகேஷ் முழக்கமிட்டார்.

Tags : Chief Justice ,Supreme Court ,P. R. ,Delhi ,P. R. Prosecutor ,Rakesh Kishor ,Kawai ,Kazurago temple ,Madhya Pradesh ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...