×

திமுக உள்ளிட்ட கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை திருச்சி மணிகண்டம் பகுதியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

திருச்சி, டிச.25: திருச்சி மணிகண்டம் பகுதியில் அமைந்துள்ள டான்போஸ்கோ அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் மற்றும் டான் போஸ்கோ சலேசிய அருட்தந்தையர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடிசைவாழ் மக்களுக்கு புத்தாடைகள் வழங்கியும், மதிய விருந்து அளித்தும், கிறிஸ்துமஸ் விழாவினை எம்.பி., திருநாவுக்கரசர் கொண்டாடினார். இதில் அனைத்து சமய தலைவர்களோடு பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அருட்தந்தைராஜ் வரவேற்றார். சலேசிய சபை அதிபர் அருட்தந்தை அகிலன் தலைமை வகித்தார். திருச்சி மறைமாவட்ட தொடர்பாளர் அருட்தந்தை யூஜின், அருட்தந்தை வில்சன், சலேசிய சபை அதிபர் அருட்சகோதரி மார்கரெட், ஆச்சரிசிங், திமுக மணிகண்டம் யூனியன் சேர்மன் கருப்பையா, வக்கீல் சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,parties ,Periyar ,Manikandam ,Trichy ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்