×

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு வெடிகுண்டு கண்டறிதல் செயலிழக்க செய்யும் பணி: வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின் வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2025 நாளன்று 50 வயதுக்கு கீழுள்ளவர்கள், கல்வித்தகுதி, குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி தொழில்நுட்ப தகுதி, சிஎம்இ புனே அல்லது என்எஸ்ஜி அல்லது பிசிஏஎஸ்சால் நடத்தப்படும், குறைந்தபட்சம் 6 வார பிடிடி படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்- ராணுவம் அல்லது துணை ராணுவ படைகளில் குறைந்தபட்ச 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 சிஇடி பிரிவு அல்லது சிஎம்இயின் இடிடி பிரிவு அல்லது என்எஸ்ஜியின் பிடி பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் என்பிடிசி அல்லது விமான நிலையங்களின் பிடி பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களம் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில்,

தமிழ் மற்றும் அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் பிடிடியை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சுயவிவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள்,

ஓய்வூதிய ஆணை பிடிடி தொடர்பான படிப்பு அனுபவம் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், மருதம் எண்:17, போட் கிளப் சாலை ராஜா அண்ணாமலைபுரம், சென்னை- 600028 என்ற முகவரிக்கு 31.10.2025க்கு முன் தகவல் மூலம் அனுப்ப வேண்டும்.

* ஆய்வாளர் (பிடிடிஎஸ்) முன்னாள் சுபேதர், சுபேதார் மேஜர் – 2 காலியிடங்கள். ஊதிய அளவு ரூ.37,770 முதல் ரூ.1,19,500.
* உதவி ஆய்வாளர் (பிடிடிஎஸ்) முன்னாள் நாயிப் சுபேதார்- 14 காலியிடங்கள். ஊதியம் அளவு ரூ.36,900 முதல் ரூ.1,16,600.
* தலைமமை காவலர் (பிடிடிஎஸ்) முன்னாள் ஹவில்தார், நாயக்-43 காலியிடங்கள். ஊதிய அளவு ரூ.20,600 முதல் ரூ.65,500.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Director General of Police ,Tamil Nadu Police ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...