×

விம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

சேலம், டிச.25: விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், அரசு வழிகாட்டுதல்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மேலும், மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து, கொரோனாவிற்கு எதிரான சுய பாதுகாப்பு ஏற்படுத்தி, தொற்று நோய் பரவும் காலங்களில் சமூக நலனில் மாணவர்கள் பங்கு எடுத்துரைத்தார். மேலும், துறை மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பாடல்கள் பாடி வாழ்த்து கூறினர். கல்லூரி வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது பிரார்த்தனை நடந்தது. இதற்கான ஏற்பாட்டை பேராசிரியர்கள் முத்துராஜ், டாக்டர் வைஷ்ணவாதேவி, டாக்டர் விஜிமேரி, ஆண்டனி ரூபன், ப்ரீத்தி, டாக்டர் ஹரிஷ்ராஜ் செய்திருந்தனர்.  ...

Tags : Christmas Celebration ,Wims Hospital ,
× RELATED தேசிய பெண் குழந்தைகள் தினம்